Posal /
Kavitha Sornavalli
- First Edition.
- 96 pages ; 22 cm.
தான் பிறந்து வளர்ந்த ஊரையும் அதன் ஆற்றையும் கடவுள்களையும் வீடுகளையும் வீட்டை ஆண்டபடி வியப்பூட்டும் கதைகளைச் சொல்லும் பெண்களையும் அவர்கள் உணவு படைத்த விதங்களையும் நெரிசலான நகர்ப்புறத்தில் வாழ வந்துவிட்ட ஒரு பெண் ஒரு வித ஏக்கத்துடனும், நினைவுகளைப் பத்திரப்படுத்தும் கவனத்துடனும் சொல்லும் கதைகள். காதலையும் உறவுகளையும் பற்றிப் புரிந்துகொள்ள முயலும், சிரிப்பையும் சிறு அழுகையையும் ஊட்டும் வாய்பிளந்து நோக்கும் புதிர் விடுபடும் வாழ்க்கைக் கட்டங்களையும் காட்டும் கதைகள் கவிதா சொர்ணவல்லியுடையது. நவீன பெண் எழுத்தாளர்களில் முக்கியமான இடத்தை கவிதா சொர்ணவல்லி தக்க வைத்துக்கொள்வார் என்பதற்கு "பொசல்" சிறுகதைத் தொகுப்பு ஒரு சான்று.